null
சுப்மன் கில் அவுட்: கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் நிதானம்- 4வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 153/3
- சுப்மன் கில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
- கே.எல். ராகுல் அரைசதம் தாண்டி விளையாடி வருகிறார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஹெட்டிங்லி, லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் சேர்த்தன.
6 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 47 ரன்களுடனும், சுப்மன் கில் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 7ஆவது பந்தில் சுப்மன் கில் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார்.
மறுமுனையில் கே.எல். ராகுல் அரைசதம் விளாசினார். கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் ஜோடி மிகவும் நிதானமாக விளையாடியது. இதனால் 4ஆவது நாள் மதிய உணவு இடைவேளை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல். ராகுல் 72 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இந்தியா 159 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் கூடுதலாக 200 ரன்கள் சேர்த்தால், இங்கிலாந்து சேஸிங் செய்ய கடும் சவாலானதாக இருக்கும்.