விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலியாவின் பலமே அனுபவம்தான்- ஹேசில்வுட்

Published On 2025-11-10 11:00 IST   |   Update On 2025-11-10 11:00:00 IST
  • ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையே ஆஷஸ் தொடர் வருகிற 21-ந்தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.
  • இத்தனை ஆண்டுகளாக ஒரு அணியாக பல்வேறு சூழல்களில் இருந்து நாங்கள் அதிகம் கற்றுள்ளோம்.

சிட்னி:

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் போட்டி கொண்ட ஆஷஸ் தொடர் வருகிற 21-ந்தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்த தொடரில் அனுபவமே தங்களது பலம் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அனுபவமே எங்களது பிரதான பலம் என கருதுகிறேன். டெஸ்ட் போட்டி அல்லாமல் அனைத்து நிலைகளும் (ஒருநாள் ஆட்டம் , 20 ஓவர்) இதில் அடங்கும். இத்தனை ஆண்டுகளாக ஒரு அணியாக பல்வேறு சூழல்களில் இருந்து நாங்கள் அதிகம் கற்றுள்ளோம். களத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம்.

அதிக வயதுள்ள வீரர்கள் கொண்ட அணி என்ற காலம் நிச்சயம் வரும். ஆனால் அதை நாங்கள் இன்னும் எட்டவில்லை என கருதுகிறேன்.

இவ்வாறு ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.

டெஸ்டில் 300 விக்கெட் என்ற மைல்கல் சாதனையை எட்ட இன்னும் 5 விக்கெட்டுகளே அவருக்கு தேவை.

ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்களில் 14 பேர் 30-க்கும் மேற்பட்ட வயதை கடந்தவர்கள். பந்து வீச்சாளர்களான நாதன் லயன் (38), ஹேசில் வுட் (34), ஸ்டார்க் (35), போலண்ட் (36) ஆகியோர் இதில் அடங்குவார்கள்.

Tags:    

Similar News