விளையாட்டு
பிரீஸ்டைல் சர்வதேச செஸ்: அரையிறுதியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி தோல்வி
- பிரீஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வருகிறது.
- அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார் அர்ஜூன் எரிகைசி.
லாஸ் வேகாஸ்:
பிரீஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 வீரர்கள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதினர். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களைப் பிடித்தவர்கள் காலிறுதிக்கு முன்னேறினர்.
நேற்று முன்தினம் நடந்த காலிறுதியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் அர்ஜூன் எரிகைசி பிரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, அமெரிக்காவின் லெவன் அரோனியன் உடன் மோதினார். இதில் அர்ஜூன் எரிகைசி தோல்வி அடைந்தார்.