விளையாட்டு
இந்திய அணியினருடன் பிரதமர் மோடி

டெப்லிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

Published On 2022-05-21 11:09 GMT   |   Update On 2022-05-21 11:19 GMT
காது கேளாருக்கான டெப்லிம்பிக்ஸ் போட்டியில் இந்திய அணி 8 தங்கம் உள்பட 16 பதக்கங்களை வென்றது.
புதுடெல்லி:

பிரேசில் நாட்டின் காக்சியாஸ் டோ சுல் நகரில் மே 1ஆம் தேதி தொடங்கிய, காது கேளாதோர் டெப்லிம்க்ஸ் போட்டிகள் நடைபெற்றன. 

மே 15ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டிகளில் 
72 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,100 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். 

இந்தியா சார்பில் 65 தடகள வீரர்களைக் கொண்ட  அணி இந்த போட்டிகள் பங்கேற்றது.

மொத்தம் 11 போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணி 8 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 7 வெண்கலம் உட்பட 16 பதக்கங்களை வென்றது.

இந்நிலையில் டெப்லிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தனர்.
அவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். 

நமது வீரர்கள் தங்களது விளையாட்டு அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாகவும், இந்த முறை டெப்லிக்ம்ஸ் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதாகவும் பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.  

அனைவருக்கும் தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News