விளையாட்டு

பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ்: அரையிறுதியில் இந்திய ஜோடி அதிர்ச்சி தோல்வி

Published On 2025-12-20 22:34 IST   |   Update On 2025-12-20 22:34:00 IST
  • சீனாவில் பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நடந்து வருகிறது.
  • ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.

பீஜிங்:

சீனாவின் ஹாங்சு நகரில் பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் தரவரிசையில் உலகின் 'டாப்-8' ஜோடி இதில் பங்கேற்கின்றன. இவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.

இந்தியா சார்பில் ஆண்கள் இரட்டையரில் உலகத் தரவரிசையில் நம்பர்-3 ஆக உள்ள சாத்வித் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி பங்கேற்றது.

இந்நிலையில், இன்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, சீனாவின் வாங் சாங் - லியான் வெய்கெங் ஜோடியை எதிர்கொண்டது.

இந்திய ஜோடி முதல் செட்டை 21-10 என எளிதில் கைப்பற்றியது.

இதில் சுதாரித்துக் கொண்ட சீன ஜோடி அடுத்த இரு செட்களை 21-17, 21-13 என வென்றது. இதன்மூலம் சீன ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்திய ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

Tags:    

Similar News