விளையாட்டு
இயன் பிஷப்- சஞ்சு சாம்சன்

திறமையை வீணடிக்கிறார் சஞ்சு சாம்சன் - இயன் பிஷப்

Published On 2022-04-27 10:02 GMT   |   Update On 2022-04-27 10:02 GMT
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட் ஆனது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் இயன் பிஷப் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பெங்களூர் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் 21 பந்தில் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

ஹசரங்காவின் முதல் ஓவரில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி அடித்த சாம்சன், ஹசரங்காவின் 2-வது ஓவரில் ரிவர்ஸ் சுவிப் அடிக்க முயன்ற போது பந்து பேட்டில் படவில்லை. அடுத்த பந்தும் அதே போல அடிக்க முயன்ற போது போல்ட் ஆனார்.

இந்நிலையில் சாம்சன் அவரது திறமையை வீணடிக்கிறார் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் இயன் பிஷப் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

சஞ்சு சாம்சன் நல்ல பார்மில் இருக்கிறார். அதிகமாக ரன்கள் சேர்த்து சர்வதேச போட்டிகளுக்கு திரும்புவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில் அவர் தனது திறமையை வீணடித்துக் கொண்டிருக்கிறார். நேற்றைய போட்டியில் ஹசரங்கா பந்து வீச்சில் அவர் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். நான் சாம்சனின் தீவிர ரசிகன். அவர் சாட் தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் அணி முதல் இடத்தை பிடித்தது. ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்றுள்ளது. 2-ல் தோல்வி அடைந்துள்ளது.

Tags:    

Similar News