விளையாட்டு
அரை சதமடித்த லிவிங்ஸ்டோன்

லிவிங்ஸ்டோன் அரை சதம் - ஐதராபாத் வெற்றி பெற 152 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப்

Update: 2022-04-17 11:58 GMT
ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் லிவிங்ஸ்டோன், ஷாருக் கான் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது.
மும்பை:

ஐ.பி.எல். தொடரின் 28வது லீக் ஆட்டம் மும்பையின் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட் செய்ய களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஷிகர் தவான் 8 ரன்னிலும், பிரப்சிம்ரன் சிங் 14 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 12 ரன்னிலும், ஜிதேஷ் சர்மா 11 ரன்னிலும் அவுட்டாகினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் லிவிங்ஸ்டோன், ஷாருக் கான் ஜோடி நிதானமாக ஆடியது. முதலில் நிதானம் காட்டிய லிவிங்ஸ்டோன் பின் அதிரடியாக ஆடினார். சிக்சர், பவுண்டரிகளை பறக்கவிட்டு, அரை சதம் கடந்து 60 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷாருக் கான் 26 ரன்னில் வெளியேறினார். ஒடியன் ஸ்மித் 13 ரன்னில் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் ஐதராபாத் அணியினர் சிறப்பாக பந்து வீசினர்.  கடைசி 7 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இறுதியில், பஞ்சாப் அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

ஐதராபாத் சார்பில் உம்ரான் மாலிக் 4 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Tags:    

Similar News