விளையாட்டு
இந்திய ஹாக்கி அணி

புரோ ஹாக்கி லீக்: 2வது முறையாக ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா

Update: 2022-04-15 22:49 GMT
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
புவனேஸ்வர்,

9 அணிகள் பங்கேற்றுள்ள புரோ ஹாக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 

இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் இந்தியா - ஜெர்மனி ஹாக்கி அணிகள் பங்கேற்ற 2வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை  வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இந்தியா தரப்பில் சுக்ஜீத்சிங், வருண்குமார், அபிஷேக் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.  ஜெர்மன் தரப்பில் ஆன்டன் போக்கெல் ஒரு கோடி அடித்தார். 

முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஜெர்மனியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. 2வது முறையாக நேற்று பெற்ற வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலில்  இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
Tags:    

Similar News