விளையாட்டு
டிராவிஸ் ஹெட், பாகிஸ்தான் வீரர்கள்

டிராவிஸ் ஹெட் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலியா 313 ரன்கள் குவிப்பு: சேஸிங் செய்யுமா பாகிஸ்தான்?

Published On 2022-03-29 19:40 IST   |   Update On 2022-03-29 19:40:00 IST
கேமரூன் கிரீன 30 பந்தில் 40 ரன்களும், பென் மெக்டெர்மோட் 70 பந்தில் 55 ரன்களும் அடிக்க, டிரவிட் ஹெட் 72 பந்தில் 101 ரன்கள் குவித்தார்.
பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 1-0 எனக் கைப்பற்றியது.

இந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி கடாஃபியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 72 பந்தில் 12 பவுணடரி, 3 சிக்சருடன் 101 ரன்கள் குவித்தார். ஆரோன் பிஞ்ச் 23 ரன்னில் ஏமாற்றம் அடைந்தாலும், பென் மெக்டெர்மோட் 70 பந்தில் 55 ரன்கள் அடித்தார். கேமரூன் கிரீன் 30 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.

பாகிஸ்தான் தரப்பில் ஹரிஷ் ராஃவ், ஜஹித் மெஹ்மூத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 314 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.

Similar News