விளையாட்டு
பி.வி.சிந்து

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் - பி.வி.சிந்து, சாய்னா நேவால் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

Update: 2022-03-16 21:13 GMT
ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பிரகாஷ் படுகோனே, கோபிசந்த் என 2 இந்தியர்கள் மட்டுமே இதுவரை மகுடம் சூடியிருக்கிறார்கள்.
பர்மிங்காம்:

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் பி.வி.சிந்து, முதல் ரவுண்டில் 17-ம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் ஷியியை எதிர்கொண்டார். இதில் 21-18, 21- 13 என நேர் செட்களில் வென்றார். இந்த வெற்றியை 42 நிமிடத்தில் பிவி சிந்து பெற்றார்.

இதேபோல், சாய்னா நேவால் முதல் சுற்றில் ஸ்பெயினின் பெட்ரிஸ் காரெல்சுடன் மோதினார். இதில் 21-17, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 
Tags:    

Similar News