விளையாட்டு
ஜெர்மனி ஓபன் - இந்தியாவின் லக்சயா சென் வெள்ளி வென்றார்
ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்சயா சென்னை வீழ்த்தி தாய்லாந்து வீரர் விடிட்சர்ன் தங்கம் வென்றார்.
ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், தாய்லாந்து வீரர் விடிட்சர்னை எதிர்கொண்டார்.
இதில், லக்சயா சென் 18-21, 15-21 என்ற நேர் செட்களில் தோற்றார். இதன்மூலம் ஜெர்மன் ஓபனில் லக்சயா சென் வெள்ளிப்பதக்கம் வென்றார்.