விளையாட்டு
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
கராச்சி மைதானத்தில் இதுவரை எந்த வெற்றியும் பெறாத ஆஸ்திரேலியா இங்கு 8 டெஸ்டில் விளையாடி 5-ல் தோல்வியும், 3-ல் டிராவும் கண்டுள்ளது.
கராச்சி:
பாகிஸ்தானுக்கு சென்றுள்ள கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராவல்பிண்டியில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கராச்சியில் இன்று தொடங்குகிறது.
தொடக்க டெஸ்டுக்கான ஆடுகளம் பேட்டிங்கின் சொர்க்கமாக இருந்ததால் பந்து வீச்சு துளியும் எடுபடவில்லை. இரண்டு இன்னிங்சையும் சேர்த்து ஆஸ்திரேலிய பவுலர்களால் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது. இதனால் கடும் விமர்சனம் எழுந்த நிலையில், சராசரிக்கும் குறைவான தரம் கொண்ட ஆடுகளம் என்று ஐ.சி.சி.யும் முத்திரை குத்தியது.
இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை எந்த வெற்றியும் பெறாத ஆஸ்திரேலியா இங்கு 8 டெஸ்டில் விளையாடி 5-ல் தோல்வியும், 3-ல் டிராவும் கண்டுள்ளது நினைவு கூரத்தக்கது.
ஆஸ்திரேலியா அணி விவரம்
1. டேவிட் வார்னர் 2. கவாஜா 3. மார்னஸ் லாபுசன் 4. ஸ்டீவ் ஸ்மித் 5. ஹெட் 6. கீரின் 7. அலெக்ஸ் ஹரி 8. பேட் கம்மின்ஸ் 9. மிட்செல் ஸ்டார்க் 10. லாதன் லயன் 11. மிட்செல் ஸ்வெப்சன்
பாகிஸ்தான் அணி விவரம்
1. அப்துல்லா ஷபீக் 2.இமாம் உல் ஹக் 3. அசார் அலி 4. பாபர் அசாம் 5.ஃபவாத் ஆலம் 6.முகமது ரிஸ்வான் 7.ஃபஹீம் அஷ்ரஃப் 8.ஹசன் அலி 9.நௌமன் அலி 10. ஷஹீன் அப்ரிடி 11. சஜித் கான்