விளையாட்டு
மகளிர் உலக கோப்பை - ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் அபார சதம்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன் பிரீத் கவுர் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 184 ரன்கள் சேர்த்தது.
ஹாமில்டன்:
12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் 10வது லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசுடன் விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அபாரமாக ஆடி சதமடித்தார்.
அவர் சிறப்பாக விளையாடி 119 பந்துகளில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு பக்கபலமாக நின்ற ஹர்மன்பிரீத் கவுரும் சதமடித்து அசத்தினார்.