விளையாட்டு
கோப்பு படம்

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்

Published On 2022-03-12 06:55 IST   |   Update On 2022-03-12 06:55:00 IST
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.
ஹாமில்டன்:

12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.  8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி போட்டிகளுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் ஹாமில்டனில் இன்று காலை தொடங்கிய லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி வெஸ்ட்இண்டீஸ் அணி பந்து வீசி வருகிறது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷாமிலியா கானல், யாஷிகா, பாட்டியவும் களம் இறங்கி உள்ளனர்.

Similar News