விளையாட்டு
நார்த் ஈஸ்ட் யுனைடெட் - ஜாம்ஷெட்பூர் அணி வீரர்கள்

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி

Published On 2022-02-26 00:56 IST   |   Update On 2022-02-26 00:56:00 IST
நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு எதிராக ஜாம்ஷெட்பூர் அணி 3 கோல்கள் அடித்தது.
கோவா:

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் இந்த போட்டிகளை பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி,  ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி வீரர்கள் ரால்ட்டெ மற்றும் மார்செலென்கோ தலா ஒரு கோல் அடித்தனர். 

ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் டவுன்கெல்,  கிரெக், ஜோர்டான் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதையடுத்து ஜாம்ஷெட்பூர் அணி  3-2 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Similar News