விளையாட்டு
ரோகித் சர்மா

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் - ரோகித் சர்மா முதலிடம்

Published On 2022-02-25 08:58 IST   |   Update On 2022-02-25 08:58:00 IST
இந்திய கேப்டன் ரோகித் சர்மா இதுவரை 123 டி20 போட்டிகளில் விளையாடி 4 சதம், 26 அரைசதம் உள்பட 3,307 ரன்கள் எடுத்துள்ளார்.
லக்னோ:

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. இதில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 37 ரன்கள் எடுத்த போது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்தின் மார்ட்டின் கப்திலை (3,299 ரன், 112 ஆட்டம்) பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்து அசத்தினார். 

இந்தப் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி (3,296 ரன்களுடன், 97 ஆட்டம்) 3-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News