விளையாட்டு
ஐ.எஸ்.எல்.கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஒடிசா - மோகன் பகான் ஆட்டம் டிரா முடிந்தது

Published On 2022-02-25 03:41 IST   |   Update On 2022-02-25 03:41:00 IST
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன.
கோவா:

ஐ.எஸ்.எல். 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி  கோவாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறை காரணமாக கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி மற்றும் ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 5 வது நிமிடத்தில்  ஒடிசா வீரர் ரெடீம் ஒரு கோல் அடித்தார். 

பதிலுக்கு ஆட்டத்தின் 8 வது நிமிடத்தில்  மோகன் பகான் அணி சார்பில் அந்த அணி வீரர் ஜோனி கவுகோ ஒரு கோல் அடித்தார். ஆட்டம் முடியும் வரையில் இரு அணிகளும் மேலும் கோல் எதுவும் போடவில்லை. 

இதனால் ஒடிசா எப்.சி மற்றும் ஏடிகே மோகன் பகான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 

Similar News