விளையாட்டு
கீகன் பீட்டர்சன்

ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றார் கீகன் பீட்டர்சன்

Published On 2022-02-15 08:33 IST   |   Update On 2022-02-15 08:33:00 IST
இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கீகன் பீட்டர்சன் தொடர் நாயகன் விருதை வென்றார்.
துபாய்:

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது. 

அதன்படி, ஜனவரி சிறந்த வீரர்களுக்கான பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் கீகன் பீட்டர்சன் மற்றும் பிரேவிஸ், வங்கதேசத்தின் எபாதத் ஹொசைன் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் கீகன் பீட்டர்சன் ஜனவரி 2022 மாதத்துக்கான சிறந்த ஐசிசி வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கீகன் பீட்டர்சன் 276 ரன்கள் குவித்தார்.
 
இதேபோல், இங்கிலாந்து அணியின் ஹீதர் நைட் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹீதர் நைட் 168 ரன் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News