விளையாட்டு
பட்டம் வென்ற சாத்விக், சிராக் ஜோடி

இந்திய ஓபன் பேட்மிண்டன் - இரட்டையர் பட்டம் வென்றது இந்திய ஜோடி

Published On 2022-01-16 18:14 IST   |   Update On 2022-01-16 18:14:00 IST
டெல்லியில் நடந்து வரும் இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர் லக்சயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் ஸ்டேடியத்தில் நடப்பாண்டிற்கான இந்திய ஓபன் பேட்மிண்டன்  போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை, இந்தோனேசியாவின் முகமது அஷன் மற்றும் ஹேந்திர செதியவான் இணையை எதிர்த்து விளையாடியது.

43 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் 21-16, 26-24 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேசிய இணையை வீழ்த்தி பட்டம் வென்றது.

Similar News