விளையாட்டு
கங்குலி மற்றும் விராட் கோலி

கேப்டன் பதவியில் இருந்து விலகல்- விராட் கோலி குறித்து கங்குலி ட்வீட்

Published On 2022-01-16 07:52 IST   |   Update On 2022-01-16 07:52:00 IST
எதிர்காலத்தில் இந்திய அணியை புதிய உயரங்களுக்கு எடுத்து செல்வதற்கு கோலியின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என கங்குலி தெரிவித்தார்.
மும்பை:

இந்திய வீரர் விராட் கோலி தனது டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று மாலை அறிவித்தார். ஏற்கனவே அவர் டி20, ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், தற்போது டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பிசிசிஐ - விராட் கோலிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு மற்றும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி ஆகிய காரணங்களே விராட் கோலியின் விலகளுக்கு காரணமாக இருக்கலாம் என பேசப்படுகிறது.



இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி ட்விட்டரில் கூறியதாவது:-

’விராட் கோலியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது. டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் எடுத்த முடிவு, அவரது தனிப்பட்ட முடிவாகும். அந்த முடிவை பிசிசிஐ மதிக்கிறது. 

எதிர்காலத்தில் இந்திய அணியை புதிய உயரங்களுக்கு எடுத்து செல்வதற்கு அவரது பங்கு முக்கியமானதாக இருக்கும். அவர் ஒரு சிறந்த வீரர்’

இவ்வாறு சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

Similar News