விளையாட்டு
எதிரணி வீரரை மடக்கும் தமிழ் தலைவாஸ் அணி

புரோ கபடி லீக் - அரியானாவை வீழ்த்தி 3வது வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ்

Update: 2022-01-10 19:19 GMT
புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் தபாங் டெல்லி அணி 5 வெற்றி, 1 தோல்வி, 2 டிரா என மொத்தம் 32 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் நீடிக்கிறது.
பெங்களூரு:

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.

இதில் நேற்றிரவு நடந்த முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக ஆடியது. இதனால் தமிழ் தலைவாஸ் அணி 24 - 18 என முன்னிலை பெற்றது.

இறுதியில், தமிழ் தலைவாஸ் 45-26 என்ற புள்ளிக்கணக்கில் வென்று மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்தது.

இதன்மூலம் தமிழ் தலைவாஸ் அணி 3 வெற்றி, 1 தோல்வி, 4 டிரா என 27 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

நேற்றிரவு நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தபாங் டெல்லி அணிகள் மோதின. 

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜெய்ப்பூர் அணி 30 -28 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இது ஜெய்ப்பூர் அணி பெறும் 4-வது வெற்றி ஆகும். 
Tags:    

Similar News