விளையாட்டு
சதமடித்த பேர்ஸ்டோவ்

சிட்னி டெஸ்டில் பேர்ஸ்டோவ் சதம் - இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 294 ரன்னுக்கு ஆல் அவுட்

Published On 2022-01-08 01:00 GMT   |   Update On 2022-01-08 01:00 GMT
சிட்னி டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக பந்துவீசிய ஆஸ்திரேலியாவின் போலண்ட் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
சிட்னி:

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது.

முதல் நாளில் மழை காரணமாக 46.5 ஓவர்களே வீசப்பட்டன. இதில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. 
2-வது நாளில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 416 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. சிறப்பாக விளையாடி சதம் விளாசிய கவாஜா 137 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 

இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட் ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.

இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் சேர்த்திருந்தது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் 36 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து இறங்கிய பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ் ஜோடி பொறுப்புடன் ஆடி அந்த அணியை சரிவிலிருந்து மீட்டது. சதமடித்து அசத்திய பேர்ஸ்டோவ் 113 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 66 ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆஸ்திரேலியா சார்பில் போலண்ட் 4 விக்கெட்டும், கம்மின்ஸ், லயான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, 122 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
Tags:    

Similar News