விளையாட்டு
கே.எல்.ராகுல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாகிறார் கே.எல்.ராகுல்

Published On 2021-12-18 10:04 GMT   |   Update On 2021-12-18 10:04 GMT
முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்க உள்ள நிலையில், துணை கேப்டன் ரோகித் சா்மா காயம் காரணமாக விலகினாா்.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது. டெஸ்ட் தொடரில் விராட் கோலி கேப்டனாகவும், ரோகித் சர்மா துணை கேப்டனாகவும்  நியமிக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையே, டெஸ்ட் தொடரில் இருந்து துணை கேப்டன் ரோகித் சா்மா காயம் காரணமாக விலகினாா். அவருக்குப் பதிலாக இந்திய ‘ஏ’ அணியின் கேப்டன் பிரியங்க் பாஞ்சல் பிரதான அணியில் இணைந்தார். ஆனால், ரோகித்துக்கு பதிலாக துணை கேப்டனாக யாரையும் பிசிசிஐ அறிவிக்கவில்லை.

இந்நிலையில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வரும் கே.எல்.ராகுல் இதுவரை 40 டெஸ்ட்  போட்டிகளில் விளையாடி 6 சதம் உள்பட 2321 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 35.16 வைத்துள்ளார்.  
Tags:    

Similar News