விளையாட்டு
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்

சி.எஸ்.கே.அணிக்கு திரும்ப அஸ்வின் விருப்பம்

Published On 2021-12-18 06:39 GMT   |   Update On 2021-12-18 06:39 GMT
சி.எஸ்.கே. அணிக்கு தாம் திரும்புவது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்தை பொறுத்து தான் இருக்கிறது என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், 2008 முதல் 2015-ம் ஆண்டு வரை சி.எஸ்.கே. அணிக்காக 94 போட்டிகளில் விளையாடியுள்ளார். பின் அடுத்தடுத்த ஆண்டுகளில் பூனே ரைசிங் ஜெயன்ட்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளில் ஆடினார். 

பின்னர் 2020-ம் ஆண்டு முதல் டெல்லி அணியில் விளையாடி வந்த அவர், தற்போது அடுத்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் மீண்டும் சென்னை அணிக்கு திரும்ப விருப்பப்படுவதாக ரசிகர்களின் கேள்வி ஒன்றுக்கு அஸ்வின் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அஸ்வின் கூறியதாவது:

சி.எஸ்.கே. என் மனதிற்கு மிகவும் நெருக்கமான அணி. சி.எஸ்.கே.வில் விளையாடியது பள்ளிக்கூடத்தில் படித்தது போன்ற அனுபவம்.  சி.எஸ்.கே அணியில் விளையாடிய பின் பிற அணிகளுக்காக விளையாட சென்று விட்டேன். எங்கே சென்றாலும் இறுதியில் வீட்டிற்கு திரும்ப தான் அனைவரும் விரும்புவர். நானும் சிஎஸ்கே அணிக்கு திரும்ப விரும்புகிறேன். ஆனால் இவை அனைத்தும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்தை பொறுத்து தான் இருக்கிறது.



அடுத்த ஆண்டு ஏலத்தில் 10 அணிகள் பங்கேற்கப் போகிறது. ஒவ்வொரு வீரரும் எந்த அணிக்காக தேர்வு செய்யப்படுவர் என இப்போதே சொல்லிவிட முடியாது. ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக எந்த அணி என்னை நம்புகிறதோ அந்த அணிக்காக நான் முழு அர்ப்பணிப்புடன் விளையாடுவேன். அந்த அணியை கைவிட மாட்டேன்.

இவ்வாறு அஸ்வின் கூறினார்.
Tags:    

Similar News