விளையாட்டு
சதமடித்த லாபஸ்சேன்

அடிலெய்டு டெஸ்ட் - ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 473 ரன்கள் குவிப்பு

Published On 2021-12-17 23:18 IST   |   Update On 2021-12-17 23:18:00 IST
இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் லாபஸ்சேன் சதமடித்து அசத்தினார்.
அடிலெய்டு:

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. பகல்- இரவு போட்டியான இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

டேவிட் வார்னர், லாபஸ்சேன் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி172 ரன்கள் சேர்த்தது. வார்னர் 95 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய ஸ்டீவன் ஸ்மித் லாபஸ்சேனுடன் ஜோடி சேர்ந்தார். லாபஸ்சேன் சதம் அடித்தார். அவர் 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்மித் 93 ரன்னில் வெளியேறினார். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் மைக்கேல் நீசர் அதிரடியாக ஆடி 35 ரன்கள் சேர்த்தார்.

ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 479 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும், ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஹமீத் 6 ரன்னிலும், ரோரி பர்ன்ஸ் 4 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.

Similar News