விளையாட்டு
ரமேஷ் மெண்டிசை பாராட்டும் சக வீரர்கள்

2வது டெஸ்ட் - வெஸ்ட் இண்டீசை 164 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை

Published On 2021-12-03 20:07 GMT   |   Update On 2021-12-03 20:07 GMT
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை வீரர் தனஞ்செயா டி சில்வா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
காலே:

இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் காலே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை முதல் இன்னிங்சில் 204 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் நிசாங்கா 73 ரன்கள் எடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் வீரசமி பெர்மவுல் 5 விக்கெட்டும் ஜோமேல் வாரிகன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 253 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் பிராத்வெயிட் 74 ரன்கள் எடுத்தார்.

இலங்கை சார்பில் ரமேஷ் மெண்டிஸ் 6 விக்கெட்டும், எம்புல்டெனியா, ஜெயவிக்ரமா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 345 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. அந்த அணியின் நிசங்கா அரை சதமடித்து ஆட்டமிழந்தார். தனஞ்செயா டி சில்வா பொறுப்புடன் ஆடி 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் பெர்மவுல் 3 விக்கெட்டும், ராஸ்டன் சேஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆனால் இலங்கை அணியின் பந்து வீச்சில் சிக்கி 132 ரன்னில் ஆல் அவுட்டானது. பானர் 44 ரன்னும், பிளாக்வுட் 36 ரன்னும் எடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் எம்புல்டெனியா மற்றும் ரமேஷ் மெண்டிஸ் தலா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். இதன் மூலம் இலங்கை அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொட்ரை 2-0 என கைப்பற்றியது.

ஆட்ட நாயகன் விருது தனஞ்செயா டி சில்வாவுக்கும், தொடர் நாயகன் விருது ரமேஷ் மெண்டிசுக்கும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News