செய்திகள்
கம்மின்ஸ்

டிம் பெய்ன் பதவி விலகலை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு கம்மின்ஸ் புதிய கேப்டன்?

Published On 2021-11-20 05:32 GMT   |   Update On 2021-11-20 05:32 GMT
ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெல்போர்ன்:

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சக பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியில் தகவல் அனுப்பிய புகாரில் அவர் பதவி விலகி உள்ளார்.

4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுக்காக டிம் பெய்ன் கேப்டன் பதவியை தற்போது இழந்துள்ளார். அவர் குறித்த தகவல்கள் வெளியானதால் இது இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஆசஸ் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் டிம் பெய்ன் பதவி விலகி உள்ளதால் புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. முதல் போட்டி வருகிற 8-ந் தேதி பிரிஸ்பனில் தொடங்குகிறது.

மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது. ஜனவரி 18-ந் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் வீரர்கள் மார்க் டெய்லர், டென்னிஸ் லில்லி, ஸ்டீவ்வாக் ஆகியோர் அவரை வெகுவாக பாராட்டி இருந்தனர்.

இதனால் டிம் பெய்ன் இடத்தில் கம்மின்ஸ் கேப்டன் ஆகிறார். 28 வயதான அவர் ஏற்கனவே துணை கேப்டனாக பணிபுரிந்து உள்ளார். இன்னும் சில தினங்களில் ஆஸ்திரேலிய தேர்வுகுழு புதிய கேப்டனை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News