செய்திகள்
மாரியப்பன்

பாராலிம்பிக்: தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை

Published On 2021-08-31 17:24 IST   |   Update On 2021-08-31 19:02:00 IST
பாராலிம்பிக் உயரம் தாண்டுல் (டி42) போட்டியில் இந்தியா வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். இன்று உயரம் தாண்டுதல் (டி42) போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் உள்பட மூன்று பேர் பங்கேற்றனர். இறுதிச் சுற்றில் இந்திய வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான மாரியப்பன் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் சரத்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இதற்கு முன் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியர்கள் இரண்டு பதக்கங்கள் வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரியப்பன் ஏற்கனவே பிரேசில் நாட்டில் நடைபெற்ற ரியோ பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வீரர் சாம் கிரேவ் மற்றும் மாரியப்பன் ஆகியோர் சமமான உயரம் தாண்டியதால் மேலும் மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இதில் அமெரிக்க வீரர் 1.88 மீட்டர் உயரம் தாண்டி முதல் இடம் பிடித்தார். மாரியப்பன் 1.86 மீட்டர் உயரம் தாண்டி 2-வது இடம் பிடித்தார்.

மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கம் வென்றார்.

Similar News