செய்திகள்
இலக்கை எட்டிய உற்சாகத்தில் சுமித் அன்டில்

டோக்கியோ பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் உலக சாதனை படைத்து தங்கம் வென்ற இந்திய வீரர்

Published On 2021-08-30 16:57 IST   |   Update On 2021-08-30 20:54:00 IST
ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பூரியன் 66.29 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
டோக்கியோ:

டோக்கியோ பாராலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (F64) போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் சுமித் அன்டில் கலந்து கொண்டார். 

அவர் இன்றைய போட்டியில் மிக அதிகபட்சமாக 68.55 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதுவரை பாராலிம்பிக்கின் ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் யாரும் எறியாத தூரம் இது என்பதால், சுமித் அன்டில் உலக சாதனை படைத்தார். 

இந்தப் போட்டியில் பங்கேற்ற இன்னொரு இந்தியரான சந்தீப் சவுத்ரி, 62.20 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நான்காம் இடத்தைப் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பூரியன் 66.29 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இலங்கையின் டுலான் கோடிதுவாக்கா வெண்கலம் வென்றார்.

Similar News