செய்திகள்
ஸ்டார் ஏர் விமானம்

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு அசத்தலான சலுகை வழங்கிய விமான நிறுவனங்கள்

Published On 2021-08-08 13:23 GMT   |   Update On 2021-08-08 13:23 GMT
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளும் பரிசுகளும் குவிந்தவண்ணம் உள்ளன.
புதுடெல்லி:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்கள் பெற்றுள்ளது. பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளும் வெகுமதிகளும் குவிந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 6 வீரர்கள் மற்றும் ஆடவர் ஹாக்கி அணி வீரர்களுக்கு இலவச பயண சலுகையை இரண்டு விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச பயண டிக்கெட் வழங்கப்படும் என கோ பர்ஸ்ட் (கோஏர்) நிறுவனம் கூறி உள்ளது. அதேபோல் ஸ்டார் ஏர் விமான நிறுவனம், வாழ்நாள் முழுவதும் இலவசமாக விமான பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த நிறுவனம், இந்தியாவில் 13 நகரங்களுக்கு விமானங்களை இயக்குகிறது.
Tags:    

Similar News