செய்திகள்
நீரஜ் சோப்ரா தங்கத்தால் பதக்கப் பட்டியலில் 66-வது இடத்தில் இருந்து 47-வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஏழு பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 47-வது இடத்திற்கு முன்னேறியது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 120 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நேற்றுவரை பளுதூக்குதல், பேட்மிண்டன், மல்யுத்தம் ஆகியவற்றில் இந்தியா 2 வெள்ளி பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் 66-வது இடத்தில் இருந்தது.
இன்றைய ரெஸ்லிங்கில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெங்கலப் பதக்கம் வென்றார். மாலை 4.30 மணிக்கு ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்று 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
இன்று ஒரே நாளில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா, பதக்க பட்டியலில் 66-வது இடத்தில் இருந்து 47-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.