செய்திகள்
கஜகஸ்தான் வீரருடன் மல்லுக்கட்டும் பஜ்ரங் புனியா

ஒலிம்பிக் மல்யுத்தம்- வெண்கலம் வென்று அசத்தினார் பஜ்ரங் புனியா

Published On 2021-08-07 10:59 GMT   |   Update On 2021-08-07 11:13 GMT
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கஜகஸ்தான் வீரருடன் பஜ்ரங் புனியா மோதினார்.
டோக்கியோ:

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா, அபாரமாக விளையாடி அரையிறுதி வரை முன்னேறினார். 

ஆனால் அரையிறுதியில் போராடி தோல்வி அடைந்தார். இதனால் இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கஜகஸ்தான் வீரருடன் மோதினார். இப்போட்டியில், பஜ்ரங் புனியா 8-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வசமாக்கினார்.
Tags:    

Similar News