செய்திகள்
அதிதீ

கோல்ஃப்: 4-ம் இடம் பிடித்து பதக்கத்தை தவறவிட்ட இந்திய வீராங்கனை அதிதீ அசோக்

Published On 2021-08-07 12:01 IST   |   Update On 2021-08-07 16:09:00 IST
ஒலிம்பிக்கில் வரலாற்றில் முதன்முறையாக இந்திய வீராங்கனை ஒருவர் கோல்ஃப் போட்டியில் வெல்வார் என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் ஏமாந்தார் அதிதீ அசோக்.
டோக்கியோ ஒலிம்பிக் கோல்ஃப் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் அதிதீ அசோக், திக்சா டகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மொத்தம் நான்கு சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. நான்கு போட்டிகளில் எந்த வீராங்கனை குறைவான வாய்ப்பில் பந்தை குழிக்குள் தள்ளுகிறார்களோ, அவர்கள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள்.

போட்டிகள் நான்கு சுற்றுகளாக நடைபெற்றது. 3-வது சுற்று முடிவில் இந்திய வீராங்கனை குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு குறைவாக (To Par) மைனஸ் 12 பெற்றிருந்தார். மொத்த புள்ளிகள் 201 பெற்றிருந்தார். இதன்மூலம் 2-வது இடத்தில் இருந்தார்.

4-வது சுற்று இன்று நடைபெற்றது. 9 ரவுண்டுகளை கொண்ட சுற்றில் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  இரண்டு மைனஸ் 2 To Par மட்டுமே பெற்று (புள்ளிகள் 269)  ஏமாற்றம் அடைந்தார். இதனால் மொத்தமாக மைனஸ் 15 To Par பெற்றார். அமெரிக்க வீராங்கனை  மைனஸ் 2 To Par  உடன் மொத்தமாக மைனஸ் 17 To Par பெற்று (மொத்த புள்ளிகள் 267) முதலிடம் பிடித்தார்.

ஜப்பான் மற்றும் நியூசிலாந்து வீராங்கனைகள் முறையே மைனஸ் 6 To Par பெற்று மொத்தம் மைனஸ் 16 To Par பெற்று (268 புள்ளிகள்) விட்டார்கள். இதனால் இரண்டு பேரும் 2-வது இடத்தை பிடித்துவிட்டார்கள். அவர்களில் யாருக்கு வெள்ளி மற்றும் வெண்கலம் என்பதற்கான போட்டி நடைபெற்றது.

அதிதீ அசோக் இன்று கூடுதலாக இரண்டு மைனஸ் To Par பெற்றிருந்தால் வெள்ளி அல்லது தங்கப்பதக்கம் பெற்றிருக்கலாம். அதற்கான வாய்ப்பு பறிபோனது. ஒன்று பெற்றிருந்தால் வெள்ளி அல்லது வெண்கலத்திற்கு பலப்பரீட்சை நடத்தியிருக்கலாம்.

இதனால்  ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய வீராங்கனை ஒருவர் கோல்ஃப் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். மற்றொரு வீராங்கனை திக்சா டகர் 50-வது இடத்தை பிடித்தார்.

Similar News