செய்திகள்
பந்தை விளாசும் சதீஷ்

சதீஷ், சாய் கிஷோர் அபாரம்- கோவை அணிக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

Published On 2021-08-06 21:29 IST   |   Update On 2021-08-06 21:29:00 IST
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அபாரமாக ஆடிய சதீஷ், 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 64 ரன்கள் விளாசினார்.
சென்னை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. லைகா கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. முன்வரிசை வீரர்கள் சோபிக்காத நிலையில், அதிரடியாக ஆடிய ராஜகோபால் சதீஷ், 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 64 ரன்கள் விளாசினார். இதேபோல் சாய் கிஷோர் 27 பந்துகளை எதிர்கொண்டு, 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன்கள் சேர்த்தார்.

கோவை அணி தரப்பில் அபிஷேன் தன்வார், செலவக்குமரன், வள்ளியப்பன் யுதீஷ்வரன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது.

Similar News