செய்திகள்
அசர்பைஜான் வீரரின் பிடியில் நிலைகுலைந்த பஜ்ரங் புனியா

ஒலிம்பிக் மல்யுத்தம்... அரையிறுதியில் பஜ்ரங் புனியா ஏமாற்றம்

Published On 2021-08-06 15:28 IST   |   Update On 2021-08-06 15:28:00 IST
இந்திய வீரர் பஜ்ரங் புனியா, அரையிறுதியில் தோற்றதால் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நாளை விளையாட உள்ளார்.
டோக்கியோ:

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டிகள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறினார்.

பிற்பகல் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பஜ்ரங் புனியா, அஜர்பைஜான் வீரர் ஹாஜி அலியேவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் துவக்கம் முதலே அஜர்பைஜான் வீரர் ஆதிக்கம் செலுத்தி புள்ளிகளை பெற்றார். அவரது உடும்பு பிடியில் சிக்காமல் கடுமையாக போராடினார் பஜ்ரங் புனியா. எனினும் இறுதியில் 5-12 என்ற புள்ளி கணக்கில் புனியா தோல்வியைத் தழுவினார்.

அரையிறுதியில் தோற்றதால் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கஜகஸ்தான் அல்லது செனகல் வீரருடன் நாளை விளையாட உள்ளார் புனியா.

Similar News