செய்திகள்
நேத்ரா குமணன்

பெண்கள் செய்லிங் ரேஸ்: தமிழக வீராங்கனை நேத்ரா குமணனின் 5, 6-வது ரேஸ் அப்டேட்ஸ்

Published On 2021-07-27 09:35 GMT   |   Update On 2021-07-27 09:35 GMT
பெண்களுக்கான செய்லிங் பிரிவில் தமிழக வீராங்கனை நேத்ரா குமணன் இதுவரை 6 ரேஸில் கலந்து கொண்டுள்ளார்.
ஒலிம்பிக்கில்  செய்லிங் போட்டியில் பெண்களுக்கான லேசர் ரேடியல் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை நேத்ரா குமணன் கலந்து கொண்டுள்ளார். மொத்தம் 10 ரேஸ் அடங்கும்

ஏற்கனவே நான்கு ரேஸ்கள் முடிந்த நிலையில் இன்று இரண்டு ரேஸ் நடைபெற்றது. 5-வது ரேஸில்  (32+310) என்ற புள்ளியுடன் 32-வது இடத்தை பிடித்தார். 6-வது ரேஸில் (39+4:39) என்ற புள்ளிகளுடன் 38-வது இடத்தை பிடித்தார்.

இதுவரை ஆறு ரேஸ்களிலும் 134 புள்ளிகள் பெற்றுள்ளார்.
Tags:    

Similar News