செய்திகள்
ஹீத் ஸ்ட்ரீக்

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனுக்கு 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை

Published On 2021-04-14 13:02 GMT   |   Update On 2021-04-14 13:02 GMT
ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்துவீச்சாளருமான ஹீத் ஸ்ட்ரீக், 8 ஆண்டுகள் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவும், விளையாடவும் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
துபாய்:

ஜிம்பாப்வே அணியின் சிறந்த பந்துவீச்சாளராக புகழப்பட்டவர் ஹீத் ஸ்ட்ரீக். 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் ஜிம்பாப்வே அணிக்குப் பயிற்சியாளராகச் செயல்பட்டபோது, ஐசிசி விதிமுறைகளுக்கு மாறாக, லஞ்சம் பெறுதல், மேட்ச் பிக்ஸிங்  தகவல்கள் பரிமாறுதல் போன்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஐசிசி விசாரணை நடத்தி வந்தது.

இதில் 5 விதமான குற்றச்சாட்டுகளைத் தான் செய்ததாக ஹீத் ஸ்ட்ரீக் ஒப்புக்கொண்டதை அடுத்து, 8 ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

ஐசிசி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 விதமான குற்றச்சாட்டுகளை ஹீத் ஸ்ட்ரீக் ஒப்புக் கொண்டதையடுத்து, இந்தத் தடையை ஐசிசி பிறப்பித்துள்ளது. 2029-ம் ஆண்டு, மார்ச் 29-ம் தேதிதான் சர்வதேச, உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பயிற்சியாளராகவோ, ஆலோசகராகவோ ஹீத் ஸ்ட்ரீக் இனிமேல் பங்கேற்க முடியும்.
Tags:    

Similar News