செய்திகள்
எம்எஸ் டோனி

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம்

Published On 2021-04-11 07:16 GMT   |   Update On 2021-04-11 07:16 GMT
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 188 ரன் குவித்தும் சி.எஸ்.கே. அணியால் வெற்றி பெற முடியவில்லை.

மும்பை:

ஐ.பி.எல். கோப்பையை டோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 3 முறை கைப்பற்றி உள்ளது.

14-வது சீசனில் சென்னை அணி நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் டெல்லி அணியிடம் தோற்றது. 188 ரன் குவித்தும் சி.எஸ்.கே. அணியால் வெற்றி பெற முடியவில்லை. அந்த அளவுக்கு அணியின் பந்து வீச்சு பலவீனமாக இருந்தது.

இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மெதுவாக பந்துவீசினார்கள். குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் பந்துவீசாமல் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டனர்.

இதற்காக ஐ.பி.எல். விதிமுறைப்படி சி.எஸ்.கே.அணி கேப்டன் டோனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். விளையாட்டு விதிப்படி 20 ஓவரை 90 நிமிடங்களில் (டைம் அவுட்டையும் சேர்த்து) வீச வேண்டும். அதாவது ஒரு மணி நேரத்தில் 14.1 ஓவரை வீசி முடிக்க வேண்டும்.

சி.எஸ்.கே.அணி பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்து கொண்டதால் டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News