செய்திகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்க வீரர் முதல் 2 ஆட்டங்களில் விளையாட மாட்டார்

Published On 2021-04-02 07:17 GMT   |   Update On 2021-04-02 07:17 GMT
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்து உள்ள தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி முதல் சில ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்று தெரியவந்துள்ளது.

சென்னை:

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 10-ந் தேதி டெல்லியுடன் மோதுகிறது. இப்போட்டி மும்பையில் நடக்கிறது.

இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று இருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹாசலிவுட் இந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக நேற்று திடீரென அறிவித்தார்.

ஆ‌ஷஸ் தொடர் முந்திய சர்வதேச போட்டிகளை கருத்தில் கொண்டு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக ஹாசலிவுட் தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்து உள்ள தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி முதல் சில ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் சி.இ.ஓ. கே.எஸ்.விஸ்வநாதன் கூறும்போது, லுங்கி நிகிடி அவரது சொந்த மண்ணில் (தென் ஆப்பிரிக்கா) நடக்கும் போட்டி தொடரில் பங்கேற்கிறார். அதன்பின் அவர் தனிமைப்படுத்துதலை பின்பற்ற வேண்டும்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 3-வது ஆட்டத்தில் இருந்துதான் அவர் விளையாட முடியும் என்றார்.

ஏற்கனவே ஹாசலிவுட் விலகியுள்ள நிலையில் தற்போது நிகிடியும் முதல் 2 ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News