செய்திகள்
சதமடித்த பிராத்வெயிட்

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் - வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 354 ரன்னில் ஆல் அவுட்

Published On 2021-03-30 21:23 GMT   |   Update On 2021-03-30 21:23 GMT
இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றி உள்ளது.
ஆண்டிகுவா:

இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராத்வெயிட், கேம்ப்பெல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கேம்ப்பெல் 5 ரன்னிலும், போனர் டக் அவுட்டாகினர்.

பிளாக்வுட் 18 ரன்னிலும், ஹோல்டர் 30 ரன்னிலும், ஜோஷ்வா சில்வா ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். கைல் மேயர்ஸ் ஒரு ரன்னில் அரை சதத்தை தவறவிட்டார். 



ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பிராத்வெயிட் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 126 ரன்னில் ஆட்டமிழந்தார். 8வது விக்கெட்டுக்கு பிராத்வெயிட், கார்ன்வெல் ஜோடி 103 ரன்கள் சேர்த்தது. கார்ன்வெல் பொறுப்புடன் ஆடி 73 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 111.1 ஓவரில் 354 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இலங்கை அணி சார்பில் லக்மல் 4 விக்கெட்டும், சமீரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
Tags:    

Similar News