செய்திகள்
கிளென் பிளிப்ஸ்

வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டி20: நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது

Published On 2021-03-30 17:33 GMT   |   Update On 2021-03-30 17:33 GMT
சவுமியா சர்கார் 27 பந்தில் 51 ரன்கள் விளாசிய போதிலும், வங்காளதேசம் அணியால் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது.
நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேப்பியரில் நடைபெற்றது. முதலில் நியூசிலாந்து பேட்டிங் செய்தது. மழை அடிக்கடி குறுக்கிட்டதால் 17.5 ஓவரில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்தபோது நியூசிலாந்து இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. கிளென் பிளிப்ஸ் ஆட்டமிழக்காமல் 31 பந்தில் 58 ரன்களும், டேரில் மிட்செல் 16 பந்தில் 34 ரன்களும் அடித்தனர்.

பின்னர் வங்காளதேச அணிக்கு 16 ஓவரில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர் முகமது நைம், 3-வது வீரர் சவுமியா சர்கார் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சவுமியா சர்கார் 27 பந்தில் 51 ரன்கள் குவித்தார். நைம் 35 பந்தில் 38 ரன்கள் சேர்த்தார்.

அதன்பின் வந்த வீரர்களால் அதிரடியாக விளையாட முடியவில்லை. இதனால் வங்காளதேசம் அணியால் 16 ஓவரில் 142 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி நியூசிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் நியூசுிலாந்து தொடரை 2-0 எனக்கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
Tags:    

Similar News