செய்திகள்
வெற்றி மகிழ்ச்சியில் நியூசிலாந்து அணி வீரர்கள்

கடைசி ஒரு நாள் போட்டி: 164 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வென்றது நியூசிலாந்து

Published On 2021-03-26 09:25 GMT   |   Update On 2021-03-26 09:25 GMT
வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெலிங்டன்:

நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி இன்று வெலிங்டனில் நடந்தது.

டாஸ் ஜெயித்த நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 318 ரன் குவித்தது. டெவன் கான்வே (126 ரன் 110 பந்து, 17 பவுண்டரி) டேரில் மிட்செல் (100 ரன் 92 பந்து, 9பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோர் சதம் அடித்தார்.

இருவரும் ஒருநாள் போட்டியில் தங்களது முதல் சதத்தை பூர்த்தி செய்தனர். வங்காளதேச தரப்பில் ரூபல் ஹூசைன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் இலக்கை நோக்கி வங்காளதேச அணி, நியூசிலாந்தின் அபார பந்து வீச்சில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. வங்காளதேச அணி 25.3 ஓவரில் 82 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்து இருந்தது. முகமது அப்துல்லா மட்டும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற வங்களாதேச அணி 42.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஏற்கனவே முதல் மற்றும் 2-வது ஒரு நாள் போட்டிகளில் நியூசிலாந்து வென்று தொடரை கைப்பற்றி விட்ட நிலையில் 3-வது ஒருநாள் போட்டியையும் வென்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Tags:    

Similar News