செய்திகள்
குர்னால் பாண்ட்யா - பிரசித் கிருஷ்ணா

குர்னால் பாண்ட்யா, பிரசித் கிருஷ்ணா அறிமுக போட்டியில் சாதனை

Published On 2021-03-24 10:10 GMT   |   Update On 2021-03-24 10:10 GMT
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்களான குர்னால் பாண்ட்யா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அறிமுகம் போட்டியிலேயே சாதனை புரிந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்களான குர்னால் பாண்ட்யா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். தங்களது முதல் போட்டியிலேயே இருவரும் சாதனை புரிந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

30 வயதான குர்னால் பாண்ட்யா 20 ஓவர் போட்டிகளில் சிறப்பாக விளையாடக் கூடியவர். ஆல்ரவுண்டரான அவருக்கு முதல் முறையாக நேற்று ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

7-வது வீரராக களம் இறங்கிய அவர் 31 பந்தில் 58 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். குர்னால் பாண்ட்யா 26 பந்தில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் அறிமுக போட்டியில் அதிவேகத்தில் 50 ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு நியூசிலாந்து வீரர் ஜான்மோரிஸ் இங்கிலாந்துக்கு எதிராக தனது அறிமுகப்போட்டியில் 35 பந்தில் அரை சதம் அடித்து இருந்தார். அவரது 31 ஆண்டுகால சாதனையை குர்னால் பாண்ட்யா முறியடித்தார்.

25 வயதான பிரசித் கிருஷ்ணா முதல் முறையாக சர்வதேச போட்டியில் அறிமுகமானார். அவர் 8.1 ஓவர் வீசி 54 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். அறிமுக போட்டியில் 4 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பிரசித் கிருஷ்ணா படைத்தார்.

இதற்கு முன்பு நோயல்டேவிட், வருண் ஆரோன், சுபர்தோ பானர்ஜி, ஹர்த்திக் பாண்ட்யா, திலிப் தோசி, டினுயோகனன், பூபேந்தர்சிங் சீனியர், பி.சந்திரசேகர், பியூஸ் சாவ்லா ஆகியோர் தங்களது அறிமுக போட்டியில் 3 விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர்.

பிரசித் கிருஷ்ணாதான் முதல்முறையாக அறிமுக போட்டியில் 4 விக்கெட்டை கைப்பற்றி முத்திரை பதித்தார்.

Tags:    

Similar News