செய்திகள்
ஓரளவு போராடிய சிக்கந்தர் , ரியான் பல் ஜோடி

டி 20 தொடரில் ஜிம்பாப்வேவை ஒயிட் வாஷ் செய்தது ஆப்கானிஸ்தான்

Published On 2021-03-20 21:45 GMT   |   Update On 2021-03-20 21:45 GMT
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி-20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அபுதாபி:

ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று டி-20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

இதில் முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே அணி 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது டெஸ்டில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டிலும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தன.

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான டி-20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 2 போட்டிகளில் வென்று 2-0 என முன்னிலை வகித்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியின் நஜிபுல்லா அதிரடியாக ஆடி அதிகபட்சமாக 72 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
உஸ்மான் கனி 39 ரன் எடுத்தார்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராசா 44 ரன்னும்,  ரியான் பர்ல் 39 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைக்கவில்லை.

இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவை 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
Tags:    

Similar News