செய்திகள்
சஞ்சனாவை திருமணம் செய்தார் ஜஸ்பிரிட் பும்ரா

கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனாவை திருமணம் செய்தார் ஜஸ்பிரிட் பும்ரா

Published On 2021-03-15 16:35 IST   |   Update On 2021-03-15 17:48:00 IST
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை திருமணம் செய்து கொண்டார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பு எடுத்துக் கொள்வதாக, பிசிசியிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

அதன் பிறகு, டி 20 தொடரிலும் பும்ரா இடம்பெறாமல் போன நிலையில், அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தது. முதலில், மலையாள நடிகை அனுபமாவை திருமணம் செய்வதாக வதந்தி பரவிய நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை மார்ச் 15 ஆம் தேதியன்று, கோவாவில் வைத்து திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியானது.

இதனிடையே, சஞ்சனா கணேசன் செய்திருந்த சில பழைய ட்வீட்களும் வைரலாகியிருந்தது. இந்நிலையில், சஞ்சனா கணேசனை இன்று பும்ரா திருமணம் செய்துள்ள நிலையில், திருமண புகைப்படங்கள் சிலவற்றை பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்திய வீரர் பும்ராவிற்கு, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பும்ரா திருமணம் செய்ய இருப்பதாக சொல்லப்படும் 28 வயதான சஞ்சனா கணேசன் ஒரு தமிழ்ப் பெண். இவரின் தந்தை கணேசன் ராமசாமி தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். ஆனால், தற்போது இருப்பது எல்லாம் மகாராஷ்டிராவின் புனேவில்தான். விளையாட்டு தொகுப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராக உள்ளார்.

Similar News