செய்திகள்
இஷான் கிஷான் - விராட் கோலி

இஷான் கிஷான் அதிரடியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Published On 2021-03-14 22:39 IST   |   Update On 2021-03-14 22:39:00 IST
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அகமதாபாத்:

இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ராய் 46 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், தாகூர் 2 விக்கெட்டுகளையும் சாஹல், புவனேஸ்வர் குமார், தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.

இந்நிலையில் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் ராகுல் விக்கெட் ஆன பிறகும் இந்திய அணி சிறப்பாக ஆடியது. குறிப்பாக 20 ஓவர் போட்டியில் அறிமுக வீரரான இஷான் கிஷான் அறிமுக போட்டியிலேயே 56 ரன்கள் எடுத்து அசத்தினார். அவர் 5 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்தார்.மறுமுனையில் இந்திய அணியின் கேப்டனும் அரை சதம் அடித்தார்.

இதனையடுத்து இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர்.

Similar News