செய்திகள்
இங்கிலாந்து வீரர்கள்

முதல் இன்னிங்ஸ் பந்து வீச்சு: 66 வருட சாதனையை முறியடித்த இங்கிலாந்து

Published On 2021-02-14 10:47 GMT   |   Update On 2021-02-14 10:47 GMT
சென்னை சேப்பாக்கம் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 329 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும், உதிரியாக ஒரு ரன் கூட கொடுக்காமல் சாதனைப் படைத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் சேர்த்தது.

இதில் ஒரு விஷேசம் என்ன வென்றால் 329 ரன்களையும் இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்தே எடுத்தனர். இங்கிலாந்து வைடு, நோ-பால், பை, லெக் பை என உதிரியாக ஒரு ரன் கூட கொடுக்கவில்லை.

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்து நன்றாக டர்ன் ஆகிய நிலையிலும் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் சிறப்பாக கீப்பிங் செய்தார்.

329 ரன்கள் வரை உதிரியாக ஒரு ரன் கூட கொடுக்காததன் மூலம் 66 வருட கிரிக்கெட் சாதனையை இங்கிலாந்து முறியடித்துள்ளது. இதற்கு முன் 1955-ல் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக உதிரியாக ஒரு ரன்கூட கொடுக்காமல் பாகிஸ்தானை 328 ரன்னில் ஆல்-அவுட் ஆக்கியது.

தென்ஆப்பிரிக்கா எதிராக 252, 247 என இரண்டு முறை இங்கிலாந்து உதிரி ரன்கள் கொடுக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 236 ரன்களில் உதிரி ஏதும் கொடுக்கவில்லை.
Tags:    

Similar News