செய்திகள்
அஷ்வின்

கிரிக்கெட் வரலாற்றில் எந்த பந்து வீச்சாளரும் நிகழ்த்தாத சாதனையை படைத்துள்ளார் அஷ்வின்

Published On 2021-02-14 16:00 IST   |   Update On 2021-02-14 16:00:00 IST
இடது கை பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக விளங்கும் அஷ்வின், 200 முறை அவர்களை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோருக்குப்பின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஷ்வின் திகழ்ந்து வருகிறார். இந்திய ஆடுகளத்தில் அவரை எதிர்த்து விளையாடுவது எளிதான காரியம் அல்ல.

குறிப்பாக இடது கை பேடஸ்மேன்களை மிக அதிக அளவில் திணறடிப்பார். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் அஷ்வின் ஐந்து விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஜோ ரூட், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இடது கை பேட்ஸ்மேன்கள்.

இருவரையும் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 முறை இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன் எந்தவொரு பந்து வீச்சாளர்களும் இத்தனை முறை இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News