செய்திகள்
முகமது அமிர்

அணி நிர்வாகம் கூண்டோடு வெளியேறினால் மீண்டும் அணிக்கு திரும்புவேன்: முகமது அமிர் சொல்கிறார்

Published On 2021-01-18 11:01 GMT   |   Update On 2021-01-18 11:01 GMT
மிஸ்பா உல் ஹக் தலைமையிலான சப்போர்ட் ஸ்டாஃப்கள் வெளியேறினால் பாகிஸ்தான் அணிக்காக மீண்டும் விளையாடுவேன் என முகமது அமிர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் முகமது அமிர். இவர் ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். சமீபத்தில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இந்தத் தொடருக்கான டி20 பாகிஸ்தான் அணியில் முகமது அமிருக்கு இடம் கிடைக்கவில்லை.

இதனால் 26 வயதேயான முகமது அமிர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் மிஸ்பா உல் ஹக் தலைமையிலான சப்போர்ட் ஸ்டாஃப்கள் மனதை பாதிக்கும் அளவில் தொந்தரவு தருகிறார்கள் எனக் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் மீண்டும் அணிக்காக விளையாடத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முகமது அமிர் கூறுகையில் ‘‘ஆமாம்... தற்போதுள்ள பாகிஸ்தான் அணியின் நிர்வாகம் வெளியேறினால் மீண்டும் அணிக்காக விளையாட தயாராக இருக்கிறேன். இதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஆகவே, தயவு செய்து பேப்பர் விற்பனைக்காக போலிச் செய்தியை பரப்புவதை நிறுத்துங்கள்’’ எனத் தெரிவிதுள்ளார்.
Tags:    

Similar News