செய்திகள்
சுனில் கவாஸ்கர்

பிரிஸ்பேனில் வரலாற்றை இந்தியா மாற்றும்: கவாஸ்கர் நம்பிக்கை

Published On 2021-01-13 10:10 GMT   |   Update On 2021-01-13 10:10 GMT
பிரிஸ்பேன் கபா மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றை மாற்றி எழுதும் என சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா- இந்தியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி தொடர்பாக முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கூறியதாவது:-

பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாத அணியாக இருக்கலாம். ஆனால் இந்த வரலாற்றை இந்திய அணி மாற்றி அமைக்கும். ரஹானே தலைமையிலான இந்திய அணியால் இதை சாதிக்க முடியும்.

பிரிஸ்பேன் மைதானம் ஆஸ்திரேலியா கோட்டையாக இருக்கலாம். ஆனால் அங்கு இந்திய அணியின் கொடி பறக்கும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரிஸ்பேன் மைதானத்தில் 2 அணிகளும் 6 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 5-ல் வெற்றிபெற்றன. ஒரு டெஸ்ட் டிரா ஆனது.

ஒட்டுமொத்தமாக இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா 62 டெஸ்டில் 40-ல் வெற்றி பெற்றது. 13 போட்டி டிரா ஆனது. 8 டெஸ்டில் தோற்றது, ஒரு போட்டி டை ஆனது.
Tags:    

Similar News